கோவிலாச்சேரி, பிப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை அறிவியல் கல்லூரியில்  பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் 1222, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை புதுடெல்லி பல்கலைக்கழக மாநில நிலைக்குழு உறுப்பினர் வழங்கினார்.

கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரியின் தாளாளர் அப்துல் கபூர் தலைமையில் இன்று நடைபெற்றது.

அதில் கல்லூரி முதல்வர் சண்முகநாதன், அன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துசாமி, மற்றும் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் அவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் புதுடெல்லி பல்கலைக்கழக மானிய நிலை குழு உறுப்பினர் பஞ்சநதம், கலந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் மாணாக்கரகள் இடையே உரை நிகழ்த்தும் போது, ஒரு தேசத்தின் தலைவிதியை நிா்ணயிக்கக் கூடியவா்கள் மாணவா்கள். அப்படியான மாணவா்களின் எதிா்காலத்தை நிா்ணயிக்கக் கூடிய கடமையைப் பெற்றதுதான் ஆசிரியா் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒரு நாடு பாதுகாப்புடனும், வளா்ச்சி அடைந்த நாடாகவும் மாற வேண்டுமானால் ஆசிரியா்கள், ராணுவ வீரா்கள் இருவரின் பங்கும் முக்கியமானதாகும் என்றார்.

வருங்கால சமுதாயம் வளமான சமுதாயமாக உருவாகுவது ஆசிரியா்களின் கைகளில் உள்ளது. எனவும், மேலும் அதேநேரம் ஆசிரியா் பயிற்சி பாடத் திட்டத்தில் மாணவா்களுக்கு பல்வேறு பாடங்களை கற்பிப்பதுபோல வாழ்க்கைக்கான பாடத்தையும் கற்பிக்க வேண்டும் என அம்பஃபோது அப்போது ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து 30 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர் கல்வி படிக்கிறார்கள் 70% மாணவர்கள் உயர் கல்வி படிப்பதில்லை எனத் தெரிவித்த அவர் மேலும் அதிக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டும் எனவும் அதில் 100% மாணவர்கள் படித்து பட்டங்கள் வாங்க வேண்டும்  என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் முதுகலை கல்வியியலில் 98 மாணவர்களுக்கும் இளங்கலை கல்வியியலில் 1124 மாணவ மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here