திருவாரூர், செப். 08 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அரசவனங்காடு கிராமத்தில் உள்ள ஆனந்த நாயகி சமேத கைலாசநாதர் ஆலயம் மற்றும் வரசித்தி விநாயகர், கற்பக விநாயகர் மற்றும் பூர்ண புஷ் கலாம்பாள் ஸமேத மஹா சாஸ்தா ஆலயங்களில் இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இத்திருக்கோயில்களில் 14வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. அதன் பின்பு அதற்கான விழாவினை நடத்த விழாக்குவினர் முடிவெடுத்து, இவ்விழாவற்காக ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு சென்ற திங்கட்கிழமை முதல் காலம் துவங்கி கோபூஜை திரவ்ய ஹோமங்கள் நடைபெற்று இன்று காலை நான்காம் கால யாகபூஜைகள் நிறைவு பெற்று வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க நான்காம் கால மகாபூர்ணாஹூதியுடன் மகாதீபாரதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து சரியாக காலை 007.00மணி அளவில் வரசித்தி விநாயகர் கற்பக விநாயகர் மஹா சாஸ்தா ஆலயங்களில் விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முலவர் தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் தீபாராதனை யும் அதனைத் தொடர்ந்து ஆனந்த நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் காலை 10மணிக்கே நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாட்டினை அரசாணக்காடு திருப்பணி குழு மற்றும் கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள் சர்வசாதகமாக செம்மங்குடி ஏகாம்பர நாத சிவம் ஹரி ஹர சிவம் மற்றும் ஆலய சிவாச்சாரியார் முத்துஸ்வாமி ஆகியோர் இந்த யாக பூஜைகள் நடத்தி விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.



















