கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைவீதியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டு மற்றும் 3 பாக்கெட் சிகரெட்டுகள் திருட்டு போனதால் இச் செய்தி நகரம் முழுவதும் பரபரப்பானது.
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம், செப் . 3 –
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைவீதியில் இன்று அதிகாலை அருகருகே உள்ள 3 கடைகளின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியத கொள்ளையர்கள் பணம், செல்போன், ஏ.டி.எம். கார்டு போன்றவை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இக் கொள்ளையில் சாதிக் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையின் பூட்டை உடைத்து 4,500 ரூபாயையும், ஆசாத் அலி என்பவரின் துணி சலவை செய்யும் கடையின் பூட்டை உடைத்து 5,000 ரூபாய் ரொக்கம், செல்போன், மற்றும் அவரது ஏ.டி.எம். கார்டுகளை கொள்ளையடித்தும் சென்றுள்ளனர்.
அடுத்ததாக ஷேக் அலாவுதீன் நடத்தி வரும் மளிகைக் கடையின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் அந்த கடையில் இருந்து 800 ரூபாய் மற்றும் 3 பாக்கெட் சிகரெட்டை எடுத்துச் சென்று உள்ளனர். அடுத்தடுத்து உள்ள கடைகளில் இக்களவு போன இச்சம்பவம் குறித்து சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நகரின் முக்கியப் பகுதியான இப் பகுதியில் அதிகாலை வேளையில் கடைகளின் பூட்டை உடைத்து அடுத்தடுத்து நடந்த கொள்ளைச் சம்பவத்தால் இப்பகுதி முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது