அரியலூர்:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள்.
இவர்களில் சிவச்சந்திரனின் உடல் கடந்த 16-ம் தேதி கார்குடி கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் சிவச்சந்திரன் இல்லத்துக்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த சிவச்சந்திரன் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் திமுக சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
அவருடன் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் வந்திருந்தனர்.