புதுடெல்லி:

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்களையடுத்து இந்திய விமானிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரவீன் கீர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில், நாட்டின் மீதான பற்று மற்றும் எங்கள் பொறுப்பினை உணர்ந்து சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் எங்களது முழு ஒத்துழைப்பினையும் அளிப்போம். பயங்கரவாதிகளுக்கு எதிரான விமானப்படை தாக்குதல்களில், இந்திய அரசிற்கு உறுதுணையாக செயல்படுவோம்.

இந்திய விமானப்படையில் ஒரு அங்கமாக செயல்படுவதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். நாட்டிற்கு ஆதரவாக செயல்படுவோம் என உறுதி கூறுகிறோம். இந்திய ராணுவத்திற்கு அடுத்தபடியாக விமானிகள் ஆகிய நாங்கள் நாட்டை காக்க தொடர்ந்து சேவை புரிவோம்.

இந்திய விமானிகள் சங்கத்தில் உள்ள எங்கள் பொறுப்புகளை அறிந்து, அனைவரும் மனப்பூர்வமாக, இந்திய நாட்டிற்கு என்றும் சேவை செய்வோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here