பூண்டி, பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமதேவன் பட்டு ஊராட்சிப் பகுதியில் அமைந்து கொரக்கதண்டலம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை தனியார் வாங்கி அங்கு தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணி நடைப்பெற்று வருகிறது.
அதுக்குறித்து அப்பகுதி ஊராட்சிமன்ற தலைவர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நிலத்தின் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த இடத்தில் குளிர்பான தொழிற்சாலை கிடங்கு கட்டப் போவதாக உண்மைக்கு மாறாக அவர் தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் இரவோடு இரவாக அந்த இடத்தில் தார் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற் கொண்டும் அத்தொழிற்சாலைக்கு தேவையான இயந்திரங்களையும் அங்கு இறக்கிவுள்ளார் என மேலும் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
அதனைத்தொடர்ந்து அத்தகவலறிந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கொரக்கதண்டலம், சோமதேவன்பட்டு, பீமன் தோப்பு, ராமதண்டலம், உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் தொழிற்சாலை தொடங்கவுள்ள இடத்திற்குச் சென்று தார் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்,
மேலும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கும் போது, இங்கு தொழிற்சாலை அமைக்கப்படுவதால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் 200 மீட்டர் தொலைவில் ஆறு உள்ளதால் அத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அந்த ஆற்றில் கலக்கும் நிலை ஏற்படும் எனவும் அதனால் எங்கள் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் அத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மண்டலத்தால் அப்பகுதியில் உள்ள சுற்றுப்புறம் மாசடைந்து, சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சுவாசக் கோளாறு புற்றுநோய், ஆஸ்துமா, போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அத்தொழிற்சாலை கட்டுமானப் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்து, இப்பகுதிவாழ் கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மற்றும் புகார் மனு கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கிஇன்றனர்.
ஏற்கனவே இந்த தொழிற்சாலை மெய்யூரை அடுத்த ராஜபாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டதாகவும் அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அவ்விடத்தை விட்டு விட்டு இந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்க பணியினை இப்பகுதி மக்களின் எதிர்ப்புகளையும் மீறி அவர்கள் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்
மேலும் இதை தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையென்றால் பொதுமக்கள் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட போடுவதாகவும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு கிராம மக்கள் சார்பில் தகவல் தெரிவித்தும், இதுவரை யாரும் இங்கு வந்து எங்களின் குறைகளை கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அவர்கள் மிகுந்த மன வேதனையுடன் இருப்பதாக அம்மக்கள் தெரிவித்தனர்,



















