புதுடெல்லி:

இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தபோது இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் ஒரு விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது.

அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பைலட் அபினந்தன் பாகிஸ்தான் பிடியில் உள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விமானம் சுடப்பட்டது.

இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிம்பர் மாவட்டம் ஹரோன் என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்தது. பைலட் அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார்.
இதை அந்த பகுதியினர் பார்த்துவிட்டு அவர் கீழே குதித்த இடத்தை நோக்கி சென்றனர். அப்போது அபினந்தன் பத்திரமாக கீழே இறங்கினார். அந்த இடத்தை இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். அவர் விழுந்த இடம் பாகிஸ்தானா? இந்தியாவா? என்பது அபினந்தனுக்கு சரியாக தெரியவில்லை.

எனவே அந்த இளைஞர்களிடம் இது பாகிஸ்தானா இந்தியாவா என்று கேட்டார். இது பாகிஸ்தான் என்று கூறிய அவர்கள் அபினந்தனை தாக்குவதற்கு முயன்றனர். எதிரிகள் மத்தியில் நின்றாலும் நெஞ்சுறுதியுடன் அவர் செயல்பட்டார்.

விமான பைலட்டுகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம். எனவே அந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். அதையும் மீறி இளைஞர்கள் கற்கலால் அவரை தாக்கினார்கள். இருந்தபோதும் வீரத்தை கைவிடாத அபினந்தன் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி எச்சரித்தார்.

பின்னர் அங்கிருந்து பின்னோக்கி சென்ற அபினந்தன் தன்னிடம் இருந்த ஆவணங்களை அருகில் இருந்த குட்டையில் வீசி அழித்தார். இதற்குள் ஏராளமான இளைஞர்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்கள் அபினந்தனை பிடித்துக் கொண்டார்கள்.

பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து சென்று ஹாலில்சவுத் என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here