திருவாரூர், செப். 27

இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் வழங்க வேண்டும். வீட்டு வசதி வாரியம் மூலம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட்டு இ எஸ் ஐ திட்டத்தில் இணைந்து மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட சாலை வசதிக்கு ஏற்ப மீட்டர் கட்டணம் மற்றும் பர்மீட்டில் தூரத்தை முடிவு செய்து கொடுக்க வேண்டும். உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் அனிபா, கௌரவ தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் வீரமணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here