கும்பகோணம், ஜூலை. 21 –

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் மற்றும் பணியாளரை அங்கு வந்த போதை ஆசாமி பாட்டிலால் தாக்கி பெருங்காயத்தை ஏற்படுத்திவுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த மருத்துவமனை பணியாளர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் மஞ்சுளா ஜெயக்குமார் என்ற செவிலியர் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது, மருத்துவமனைக்கு வந்த போதை ஆசாமி திடீரென அவரை தாக்கி உள்ளார். வலியால் கூச்சலிட்ட மஞ்சுளாவை காப்பாற்ற வந்த சதாசிவம் என்ற மருத்துவ பணியாளர் மற்றும் மணியையும் இந்த போதை ஆசாமி பாட்டிலால் குத்தி கிழித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த சதாசிவம் கும்பகோணம்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இந்த தாக்குதலை நடத்திய ஆசாமியின் பெயர் அப்துல் ரகுமான் எனத்தெரிய வருகிறது. இது குறித்து நாச்சியார் கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here