சென்னை, பிப். 12 –
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை பேசினார்.
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசபாளையம் கிராமத்தில் கொவிட் தடுப்பூசி, தூய்மை இந்தியா, 75 ஆவது ஆண்டு விடுதலைப் பெருவிழா உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை மையமாக வைத்து நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எம்..அண்ணாதுரை தலைமை உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
கொவிட் 19 போன்ற தொற்று நோய்களின் பரவல் அதிகரிக்கும் போது, தொற்றுப் பாதிப்பைத் தவிர்க்க மக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எனவும், மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நாம், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர வேண்டும் என்றும் அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.
மண்வள அட்டைத் திட்டம் மற்றும் இந்திய தரநிர்ணய அமைவனத் திட்டங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய கோயம்புத்தூர் மக்கள் தொடர்புகள அலுவலக துணை இயக்குநர் மதிகரீனாபி.தெங்கமம், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்திய தரநிர்ணய அமைவன அதிகாரி அருள்சத்யா பேசுகையில், இந்திய தரநிர்ணய அமைவனத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.சத்தியமங்கலம் துணைகாவல் கண்காணிப்பாளர் ஜெயபால், கொவிட் விழிப்புணர்வுதுண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் விநியோகித்தார்.





















