மாதவரம், செப். 02 –
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் ஊராட்சியில் உள்ள முஸ்லிம் நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டினை முற்றிலுமாக நிவர்த்தி செய்ய கூடுதல் புதிய நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியினை கட்டும் பணிதிட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பணிக்கான பூமி பூஜை முஸ்லிம் நகர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், துணைத் தலைவர் மீனாட்சி பாண்டியன், ஒப்பந்ததாரர் ஆமூர் ஆனந்தன் . வார்டு உறுப்பினர்கள் அம்ஜத்.அப்பஸ் உள்ளிட்ட திரளான கிராம மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.