மாண்டியா:

கர்நாடகா மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கர்நாடக முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவருமான குமாரசாமி மாண்டியாவில் ரூ.5 ஆயிரம் கோடி நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இது அவரது தேர்தல் பிரசார தொடக்கமாக கருதப்படுகிறது. விழாவில் குமாரசாமி பேசியதாவது:-

கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் பிரதமராகும் உகந்த சூழ்நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஒட்டு போட்டு 22 தொகுதிகளை கைப்பற்றினால் கர்நாடகாவை சேர்ந்தவர் பிரதமர் நாற்காலியில் அமரலாம். 1996-ல் இருந்த அரசியல் சூழ்நிலை போலவே தற்போது உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். தனது தந்தையான தேவேகவுடா மீண்டும் பிரதமர் பதவிக்கு தயாராக இருப்பதாக குமாரசாமி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். தேவேகவுடா 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரை பிரதமராக பணியாற்றினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here