தஞ்சாவூர், பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம்,  தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான  கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ சந்திரசேகரன் ஆகியோர் அப்பணியை தொடங்கி வைத்து மேலும் அப்பணி சிறப்பாகவும், விரைவாகவும் நடைப்பெற தங்கள் வாழ்த்தினை தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை, திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்திற்குட்பட்ட மிகவும் பழமையான கள்ளப்பெரம்பூர் ஏரி மற்றும் அள்ளுர் ஏரி புனரமைக்கும் பணி பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது. மேலும் அப்பணிக்காக ரூ 4 கோடியே 68 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு பணித் தொடங்கப்பட்டுள்ளது.

அத் தூர்வாரும் பணியினை எம்பி பழனிமாணிக்கம், எம்எல்ஏ சந்திரசேகரன், ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர், மேலும் கள்ளப் பெரம்பூர் ஏரி ஏரி என்பது அம்மாவட்டத்தில் பழமையான ஏரிகளில் அதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கின்றனர். மேலும் அவ் ஏரி சுமார் 640 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஆகும், அதன் மூலம் சுமார் 2662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று பயன் பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ் ஏரியின் நீளம் சுமார் 3218 மீட்டர் ஆகும், இந்த பணியின் மூலம் மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், ஏரியை தூர்வாரி மணல் குன்றுகள் அமைத்தல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது, சிறப்பு மிகு பணித்திட்ட தொடக்க விழாவில் பொதுப்பணித்துறை அலுவலர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அந்நிகழ்ச்சிக்கு சிறப்புச் சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here