திருவண்ணாமலை அக்.28-
திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர் – 2021 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் 29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக் கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை வங்;கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.
அயனம்பாக்கம் அரசு பள்ளி மற்றும் விளையாட்டு பூங்கா ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் புதிய கட்டிடத்தை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தனர்