திருவண்ணாமலை அக்.28-
எதிர் வரும் நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கடைகளைத் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அந்தந்த நியாய விலைக் கடைகளில் 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் காலை 8.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையிலும் பிற்பகல் 2.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் செயல்படும் எனவும் அத்தியாவசியப் பொருட்கள் பெறவருகின்ற வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், மேலும் ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசையில் நின்று அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுக் கொள்ளுமாறும், அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் மாவட்ட ஆட்;சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04175 – 233063 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.