காஞ்சிபுரம், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பணியாளர்கள் புதிய ஊதிய உயர்வு அறிவிக்க கோரியும், பதவி உயர்வு வழங்க கோரி, 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கருணை ஓய்வூதியம் ரூ.1000 வழங்கி வரும் பணியாளர்களுக்கு உயர்த்தி வழங்க கோரியும், பழைய ஓய்வூதியம் திட்டம் வழங்க கோரியும், காலி பணியிடங்களை நிரப்பக்கோரும் கோரிக்கைகள் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






















