ஆவடி வேல்டெக் மல்டி டெக்கின் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இந்திய அரசின் கண்டுபிடிப்பு பிரிவின் தலைமை தொடர்பு அலுவலர் டாக்டர் அபேஜெரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணாக்கர்களுக்கு பட்டய சான்றுயிதழ்கள் மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கி பேருரை ஆற்றினார்.
ஆவடி:மே.6-
திருவள்ளூர் அருகே உள்ள ஆவடி வேல்டெக் மல்டிடெக் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (திங்கள் கிழமை ) காலை கல்லூரியின் வளாகத்தில் உள்ள டாக்டர் RR டாக்டர் SR மாநாட்டு உள்ளரங்கில் நடைப் பெற்றது.
அவ் விழாவிற்கு பேராசிரியர். வேல் டாக்டர்.டி. ஆர். ரங்கராஜன், டாக்டர். சகுந்தலா ரங்கராஜன் (நிறுவன தலைவர் மற்றும் தலைவர், வேல் டெக் தொழில்நுட்ப நிறுவனங்கள்) தலைமை தாங்கினார்கள். K.V.D.கிஷோர் குமார், துணைத்தலைவர் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜாமணி வரவேற்புரை யாற்றினார்
இந்திய அரசின் கண்டுபிடிப்பு பிரிவின் தலைமை தொடர்பு அலுவலர் டாக்டர் அபே ஜெரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இளங்கலை பொறியியல் தகுதி பெற்ற 522, மாணக்கர்களுக்கு பட்டங்களையும் அண்ணா பல்கலை தரவரிசையில் இடம்பெற்ற 22 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கி மாணாக்கரிடையே உரை நிகழ்த்தினார்.அவரது உரையில் சாதனைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வயது தடையாக இருக்காது ஆக்கமும் முயற்சியுமே முக்கியப் பங்காற்றும், உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள அனைத்து அரசு துறைகளும் தயாராக இருக்கிறது, ஆராய்ச்சியிலும் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்றார். அதற்கான கட்டமைப்புகளை டாக்டர் திரு ரங்ரராஜன் சகுந்தலா தம்பதிகள் உறுவாக்கி இருக்கிறார்கள் மாணவர்கள் வாய்பினை பயன்படுத்கி முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டார். முன்னதாக பேராசிரியர் ஹரீஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் குடும்பத் தினர்களும் கலந்துக் கொண்டனர்.