பாபநாசம், மார்ச். 26 –

தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு வருகை தந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு, நேற்றிரவு அப்பகுதி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும் மயிலாடுதுறையில் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் நேற்றிரவு தஞ்சையிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணம் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது பாபநாசம் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திரண்டு அவருக்கு சால்வை அணிவித்து மேளதாளம் முழங்க அப்போது உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வின்போது, கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து, பாபநாசம் நகர செயலாளர் கலைநிதி, அய்யம்பேட்டை நகர செயலாளர் முகமது இப்ராகிம், பொதுக்குழு உறுப்பினர் ராஜகோபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திரளான தொண்டர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here