சென்னை, டிச. 06 –
தமிழ் சினிமாவில் எத்தனையோ திரில்லர் படங்கள் வந்திருந்தாலும், அவற்றை யெல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் தற்போது தயாரிக்கப்பட்டு டிசம்பர் 9 ஆம் தேதி உலகெங்கும் வெளி வரவுள்ள ஹாலிவுட் ஹரார் திரில்லர் திரைப்படத்திற்கு நிகரான தமிழ் திரைப்படம்தான் ஈவில் என அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தெரிவிக்கின்றர்.
இத்திரைப்படத்தை ஆர்யன் பிலிம்ஸ் சார்பில் யத்தீஷ் பி கே தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக ஜெகன் அலோசியஸ் இயக்கியுள்ளார்
இத்திரைப்படத்தில் கன்னட முன்னணி நடிகர்களான ஜாடி ஆகாஷ் மற்றும் நித்தியராஜ், ஜீவா, லாவிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஈவில் திரைப்படத்திற்கு ஜெயதேன்தீசன் இசையமைக்க கிரன் கஜா மற்றும் சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், காளிதாஸ் நீலகண்டன் படத்தொகுப்பு பணியினை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார்.
இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் தெரிவிக்கும் போது, ” ஈவில் கணினி அமானுஷ்ய அனுபவம் தரக்கூடிய திரைப்படமாகும். எனவும், திரைப்பட ரசிகர்கள் இத்திரைப்படத்தை பார்க்கும் போது வழக்கமான திகில் படமாக இது அவர்களுக்கு இல்லாமல் ஒரு வித்தியாசமான தமிழ் திகில் படமாக இருக்கும் எனத்தெரிவித்தார் மேலும் ஹோலிவுட்டில் கொண்டுரியன் நுண் படங்களின் கருத்து எடுத்து தமிழுக்கு பொருத்தமான வகையில் இயக்கியுள்ளேன் எனத் தெரிவித்தார்.





















