கும்பகோணம், ஏப். 22 –
கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார்கோவிலில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரிவுயர்வையும், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறி, மேலும், தொடர் மின்வெட்டை கண்டித்து கடைவீதியில் செயலாளர் பிரகாஷ் தலைமையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைச் செயலாளர் சாக்ரடீஸ் பொருளாளர் ஜெகன் செய்தித் தொடர்பாளர் விமல்ராஜ் தலைவர் பார்த்திபன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மணி செந்தில் கிருட்டிணகுமார் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் மாவட்ட செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு தொடர் மின்வெட்டை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.




















