கும்பகோணம், மார்ச். 26 –

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்றதும், மாசிமாத சிவராத்திரிநாளில் முதற்காலத்தில் ஆதிசேஷன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்றதாக இத்தல வரலாறு கூறப்படும் இச்சிறப்புமிக்க கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் உத்திர பிரமோற்சவம் விழா தொடங்கியது.

மேலும், அருள்மிகு ஸ்ரீபிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி இத்திருக்கோயிலில் சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள்  தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்வதாகவும் இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பிரமோற்சவம் ஆண்டுதோறும், பத்து நாட்களுக்கு இங்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.

அதுப்போன்று, இவ்வாண்டுக்கான விழா, இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான 30ம் தேதி வியாழக்கிழமை ரிஷப வாகன ஓலைச்சப்பரமும், 7ஆம் திருநாளாக 1ஆம் தேதி சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவமும்,  ஒன்பதாம் நாள் விழாவாக 3ம் தேதி திங்கட்கிழமை திருத்தேரோட்டம் பத்தாம் நாள் விழாவாக 4ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்திகளும் மகாமக குளக்கரையில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here