நேற்று ஜூலை 24 – 2021 சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழிணைய ஒருங்குறியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது மற்றும் தமிழிணைய ஒருங்குறி மாற்றியை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சியினை இணையவழியில் துவக்கி வைத்தார். இணையவழியில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் ஜெயசீலன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.