தொடர்ந்து நிலவி வரும் மின்தடையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதி மக்கள் ….
பொன்னேரி, டிச. 07 -
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கன மழையின் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள மழை நீர் புகுந்தது.
அதனால் இன்று...
மீஞ்சூரில் நடைப்பெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர்...
மீஞ்சூர், டிச. 02 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் 2வது வார்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அம்முகாமில் புதிதாக...
தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியின் சடலம் கண்டெடுப்பு : குற்றவாளியை பிடிக்க பொன்னேரி காவல்துறையினர் தனிப்படை...
பொன்னேரி, டிச. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மெதூர் ஊராட்சி மன்றம் அருகே நேற்றிரவு, பழவேற்காடு செல்லும் சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்றத் தகவல் பொன்னேரி காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.
அதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மற்றும்...
வாகனவோட்டிகளுக்கு இனிப்பு வழங்கி நெடுஞ்சாலை துறைக்கு எதிர்ப்பைத் தெரிவித்த மீஞ்சூர் பகுதி பாஜகவினர் …
மீஞ்சூர், நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலை பல வருட காலமாக சீரமைக்கப்படவில்லை எனவும், சமீபத்தில் பெய்து வரும் கடும் மழையால் மேலும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதாகவும், அதனால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி,...
ஆரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறித்த போட்டி : வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு மற்றும்...
ஆரணி, நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அறிவுறுத்தல் படி, பொன்னேரி வட்டக் கிளையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக...
பொன்னேரி நகராட்சி மன்றத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …
பொன்னேரி, நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியின் கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.
அக்கூட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் கனமழை குறித்து மழை...
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தோனிரவு கிராமத்தில் நடைப்பெற்ற புதிய நூலகம் திறப்புவிழா …
பழவேற்காடு, நவ. 30 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காடு பகுதிக்குட்பட்ட தோனிரவு கிராமத்தில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது,
பொன்னேரி தொகுதி தலைவர் எம் சிலம்பரசன் அந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தொடர்ந்து இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று...
சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட கம்மவார்பாளையம் வாழ் பொதுமக்கள்…
மீஞ்சூர், நவ. 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் கம்மவார்பாளையம் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தும் சரக்கு பெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றது. அதனால் அச்சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அச்சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் பாதிப்படைந்த...
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைப்பெற்ற மாவீரர் நாள் அனுசரிப்பு …
கும்மிடிப்பூண்டி, நவ. 29 -
திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1000 குடும்பங்களில் 2744 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தாய் நாடான இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காக போராடி தமது உயிரை ஈந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும்...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ….
பொன்னேரி, நவ. 29 -
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமணம் மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம்...
























