பொன்னேரி, நவ. 29 –

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமணம் மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி. பலராமன் தலைமை வகித்தார், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, வழக்கறிஞர் திருமலை, மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், மாவட்ட இணை செயலாளர் பழவை சுமித்ராகுமார், மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,

மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், பொன்னேரி தொகுதி பொறுப்பாளருமான  பொன்னையன் கலந்துகொண்டு நிர்வாகிகளின் மத்தியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து உறுப்பினர்களும் கட்சியின் வேட்பாளர்களை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட பாடுபட வேண்டும் எனவும், கழக முன்னோடிகளுக்கு இளைஞர்களும், இளம் பெண்களும் உறுதுணையாக இருந்து செயலாற்ற வேண்டும் என அப்போது அவர் உரை நிகழ்தினார்.

மேலும் பூங்குளம், சேலியம்பேடு, கல்லூர், அகரம், உள்ளிட்ட 26 ஊராட்சிகளை சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களை வழிநடத்த பழவை சுமித்ராகுமார், தமிழ்ச்செல்வன், கடப்பாக்கம் ராஜா, ஆறுமுகம், உதயகுமார், உள்ளிட்ட ஐந்து பொறுப்பாளர்களையும் தேர்வு செய்து அறிமுகப்படுத்தினார், இந்நிகழ்ச்சியில் செல்வகுமார், மீஞ்சூர் வழக்கறிஞர் மாரி, தமிழரசன், உள்ளிட்ட திரளான அதிமுக தொண்டர்கள் பலர்கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here