கும்பகோணம், டிச. 10 –

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோண மாநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 30 க்கு மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தாராசுரம் புறவழிச் சாலையில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துசெல்வம், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஜிகேஎம் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சுதாகர், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், மாவட்ட விளையாட்டு மேம்பட்ட அணி அமைப்பாளர் சிவகுமார்,  துணை அமைப்பாளர் வசந்த ராஜ், சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் அனிதா செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் இளங்கோ, ஒன்றிய அவைத்தலைவர் அன்பழகன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்களாக நடைப்பெற்ற இப்போட்டியில், தஞ்சை, திருவாரூர் மாவட்டத்திலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசாக 27 ஆயிரத்து 11 இரண்டாம் பரிசாக 17 ஆயிரத்து 12 மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here