Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தூர்வாரும் பணிகள்-எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார். சென்னை-தண்டையார்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...

தியாகராயநகரில் மாநகர பஸ் மோதி சிறுவன் பலி

சென்னை: சென்னை தியாகராய நகரில் இருந்து மாநகர பஸ் முகப்பேருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டிச் சென்றார். தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த 8 வயது சிறுவன் தருண்ரோஷன் பரிதாபமாக உயிர் இழந்தான்....

காதலியின் முத்தத்துக்காக ‘பர்தா’வுடன் சுற்றிய மாணவர் போலீசில் சிக்கினார்

காதலில் விழும் இன்றைய இளைஞர்கள் காதலி சொல்வதை அப்படியே வேதவாக்காக கருதி விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காதலிக்காக மோட்டார் சைக்கிள்களை திருடி உல்லாசமாக ஊர் சுற்றிய வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கொரட்டூர் பகுதியில் பிடிபட்டார். இவரைப்போல சென்னையில் காதலியுடன் வசதியாக வாழ்வதற்காக...

பயணிகளின் சிரமங்களை தவிர்க்க மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் மாநகர பஸ் நிறுத்தம்

சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு...

பணமூட்டையுடன் ஓட்டு கேட்க வருவார்கள், சிந்தித்து வாக்களியுங்கள் – டிடிவி தினகரன்

ஈரோடு: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி டி.டி.வி. தினகரன் ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதிக்கு வந்துபொது மக்களை சந்தித்துபேசினார்....

அருப்புக்கோட்டை அருகே விபத்து: கணவன்-மனைவி பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலான் குளத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது70). இவரது மனைவி மாரியம்மாள் (63). கணவனும், மனைவியும் இன்று காலை அருப்புக்கோட்டைக்கு மொபட்டில் புறப்பட்டனர். 11.30 மணி அளவில் கோவிலாங்குளம் 4 வழிச் சாலை விலக்கில் மொபட் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி...

நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் பால் வியாபாரி பலி

நாட்டறம்பள்ளி: நாட்டறம்பள்ளி பூபதி தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 55) பால் வியாபாரி. இவர் நேற்று மாலை பங்களாமேடு என்ற இடத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் படுகாயமடைந்தார் அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு...

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 385 கனஅடியாக அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை: சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கடந்த 7-ந்...

திருப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின்ரோடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுர உச்சியில் ஏறிய ஒரு வாலிபர் திடீர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு கூடி வாலிபரை இறங்குமாறு கூறினர். ஆனால் வாலிபர் இறங்க மறுத்து குதிக்க போவதாக...

தொண்டர்களே ஆராய்ந்தால் வழிநடத்த தலைவன் எதற்கு?-ரஜினிகாந்த் மீது சீமான் பாய்ச்சல்

திருச்சி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் மத்திய அரசின் மோசமான கவனக்குறைவால் தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது. ‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளை கடுமையாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS