சென்னை:
சென்னை தியாகராய நகரில் இருந்து மாநகர பஸ் முகப்பேருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டிச் சென்றார். தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த 8 வயது சிறுவன் தருண்ரோஷன் பரிதாபமாக உயிர் இழந்தான். மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆனந்த விகன் படுகாயம் அடைந்தார். பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சங்கரை கைது செய்தனர்.