புதுச்சேரி, மார்ச். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்

பாஜக குறித்து தவறான தகவல்களை தெரிவித்து வரும், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எச்சரிக்கை விடுத்துள்ளார் புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செல்வகணபதி அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

புதுச்சேரியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவை சேர்ந்த 4-பெயர்கள் கொண்ட  பட்டியலை கட்சியின் தலைமைக்கு அனுப்பப்பட்டுளாதகவும் மேலும் பாஜக உறுப்பினர் அல்லாத ஆதரவு எம்.எல்.ஏ சிவசங்கரன் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் தேவையில்லாமல் கருத்தை தெரிவித்துள்ள சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் இனிவரும் காலங்களில் பாஜக சார்பில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேம் எனவும் அப்போது அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்னாள் முதலமைச்சர் தெரிவித்து வருவதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை விமர்சிக்க வெண்டும் என்றும் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுப் போன்ற கருத்துக்களை தெரிவித்து வரும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது சைபர் க்ரைம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அப்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி நாராயணசாமி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் எனவும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டி:- செல்வகணபதி எம்.பி (பாஜக மாநிலத் தலைவர்,புதுச்சேரி)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here