திருத்துறைப்பூண்டி, மார்ச். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு. அம்பிகாபதி

திருவாரூர் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா மருத்துவமனை,  இணைந்து பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்  திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மகாலில் நடைப்பெற்றது.

சரியாக காலை 9 மணிக்கு துவங்கிய அம்முகாமிற்கு, ரோட்டரி சங்க செயலாளர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். தலைவர்  கணேசன் தலைமை  வகித்தார். உதவி ஆளுநர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

மேலும் அம் முகாமில் பங்கேற்ற 166 பயனாளிகளில் 45 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை சங்கரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர் மற்றும் கண் சிகிச்சை முகாம் சேர்மன், இ-கம்னியூகேசன் சேர்மன் துரை ராயப்பன், முன்னாள்  பொருளர் ரவி, சங்கரா கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் உமாநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முகாம் நிறைவில் அச்சங்கத்தின் செயலாளர் சதா. பத்மநாபன் முகாமிற்கு வருகைத்தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here