திருவள்ளூர், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடும் D தமிழ்மதி கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தாலைவர் பிரேம்குமார், மாநில செயலாளர் பெரியார் அன்பன், தேவா, உள்ளிட்டோர் அப்போது அவருடன் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் D தமிழ்மதி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஆட்சியாளர்கள் முறையாக கடைப்பிடித்தாலே போதும் அனைத்து தர மக்களுக்கும் சமத்துவம் கிடைக்கும் என்றார்.
மேலும் எல்லா மக்களுக்கும் கல்வி, பொருளாதாரம் என அனைத்து வளர்ச்சிகளையும் அம்மக்கள் பெற்றிட வண்டும் என்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் அடிப்படைக் கொள்கையாகும் என வேட்பாளர் D தமிழ்மதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
.பேட்டி : D.தமிழ்மதி – பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்.






















