திருமுல்லைவாயல், ஜூலை. 02 –

திருமுல்லைவாயல் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வரும் திருமதி சரஸ்வதி (34) என்பவரின் 16 வயது மகள் பத்தாவது வரை படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28.6.22 ஆம் தேதி வீட்டில் இருந்தவர் காணவில்லை என்று திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் விஜயராகவன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் சிறுமியை துணிக்கடையில் வேலைப்பார்த்து வரும் கோகுல் (20) கன்னியம்மன் நகர் மோரை வீராபுரத்தைச் சேர்ந்தவர் ஆசை வார்த்தை கூறி கூட்டிச் சென்றதாக தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மேற்படி சிறுமியை கடந்த ஜூலை 01-22 ஆம் தேதி நேற்று மீட்டு பெற்றோரிடத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும், கோகுலை இன்று 2.7.22 தேதி கைது செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கூட்டிச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here