திருவாரூர், செப். 01 –
திருவாரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பல்வேறு மருத்துவப் பிரிவு மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கட்டடங்களையும் மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ கட்டிடங்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது
75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதியோருக்கு தனியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல்முறையாக திருவாரூரில் இதற்கான தனி மருத்துவ கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சித்த மருத்துவ கட்டடம் கட்டப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொடு உணர் பூங்கா மற்றும் கழிவறை வசதிகளும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆதிச்சபுறத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ம.சுப்பிரமணி தெரிவித்தார்.
பேட்டி: ம.சுப்பிரமணியன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்