புதுச்சேரி, ஏப். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …

கடும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் புதுச்சேரியின் பிரதான சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக 36 மணி நேரத்திற்கு மேலாக வீடுகளுக்கு செல்லும் குடிநீர் வீணானது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரியின் வெள்ளை நகரப்பகுதி என அழைக்கப்படும்  காமாட்சி அம்மன் கோவில் வீதி மற்றும் ஆம்பூர் செல்லும் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி நகராட்சி சார்பில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கட்டுமான பணியின் காரணமாக  அருகில் உள்ள வீடுகளுக்கு வினியோகம் செய்யும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நேற்று காலை முதல் குடிநீரானது வீணாகி தெருமுழுவதும் ஓடியது. இது குறித்து நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சாலையை கடந்த சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்தும் நேற்று விடுமுறை என்பதால் யாரும் வரவில்லை.

இதனைத் தொடர்ந்து 36 மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக சாவாசமாக வந்த நகாராட்சி ஊழியர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் இந்த கோடைக்காலத்தில் பல்வேறு இடங்களில் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் குடிநீர் வீணாகி சாலையில் ஆறாக ஓடியது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here