சென்னை, ஆக 2 –

டோக்கியவில் நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல வாழ்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.

இதுக் குறித்து அவரது வாழ்த்துச் செய்தியில், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ளதை அறிந்து பூரிப்படைகிறேன். நீங்கள் வரலாறு படைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஒலிம்பிக் தங்கப் பதக்கதைக் கைப்பற்ற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அப்பதிவில் இந்திய ஹாக்கி அணியினருக்கு தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here