சென்னை, ஆக 2 –
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்ட விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவரை, முதலமைச்சர் மற்றும் பேரவைத் தலைவர் வரவேற்றார்கள்.
அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்புரை ஆற்றினார். பின்பு இந்தியக் குடியரசுத்தலைவர் தமிழ்நாடு சட்டமன்ற மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சிறப்புரை ஆற்றினார். பின் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை வுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பேரூரையாற்ற இறுதியாக பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நன்றியுரை ஆற்றினார்.
இச் சிறப்பு மிக்க விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சஞ்சிப் பானார்ஜி அமைச்சர்கள், நாடாளு மன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புது தில்லிக்கான தமிழ் நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி, முன்னாள் பேரவைத் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், வாரியத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டார்கள்.
முன்னதாக முதலமைச்சர் இந்தியக் குடியரசுத் தலைவரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று, தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பிரபல ஆங்கில பதிபகங்ளோடு கூட்டாக சேர்ந்து வெளியீட்டுள்ள நூல்களான பேராசிரியர் பி.எஸ்.சந்தரம் அவர்களின் ஆங்கில மொழிப் பெயர்ப்பான உலகப் பொதுமுறை எனப் போற்றப் படும் திருக்குறள், கரிசல் கதைகள் , கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா. அவர்கள் தொகுத்த கரிசல் நில மக்களின் வாழ்வியலை நுணுக்கமாக சித்தரிக்கும் கதைகள், வாடிவாசல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டினை சித்தரித்து சாகித்ய விருதுப்பெற்ற சி.சு செல்லப்பா அவர்கள் எழுதிய படைப்பையும், நூற்றாண்டு காணும் தமிழ் எழுத்தாளர் கி.ஜானகிராமன் அவர்களின் சிறந்தப் படைப்புகளில் ஒன்றான குடும்ப உறவுச் சிக்ல்களை சித்தரிக்கும் செம்பருத்தி நாவல், முத்தமிழரிஞர் கலைஞர் அவர்களால் அனைத்துப் படைப்புகளும் நாட்டுடமை ஆக்கப் பட்ட சாகித்ய அகடாமி விருதுப் பெற்ற முதல் பெண் நாவலாசிரியர் இராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய தமிழில் முதல் பெண்ணியல் நாவல் எனப் போற்றப் படும் சுழலில் மிதக்கும் தீபங்கள், நாகர்கோவில் வட்டார வழக்கும் கைம்பெண் மறுமணத்தையும் முக்கிய அம்சங்களாகக் கொண்ட சாகித்ய அகடாமி விருதுப் பெற்ற நீல பத்நாபனின் தலைமுறைகள் ஆகிய நூல்களை வழங்கினார்.