வியாசர்பாடி, ஜன. 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார்

சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் வேணுபிரகாஷ் தலைமையில், தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் வெகுச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது.

மொத்தம் 17 துறைகளை தன்னகத்தேக் கொண்டு வெகுச்சிறப்பாக  இயங்கி வரும் அக்கல்லூரியில், பொங்கல் திருவிழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடும் வகையில், 17 துறைகள் சார்பில் ஒவ்வொரு துறைச் சார்ந்த தலைவர்களின் தலைமையில் தமிழர்களின் சிறப்புமிகு விழாவாக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவினை, தமிழர் கலை மற்றும் பண்பாட்டினை பறைசாற்றும் விதத்தில் அக் கல்லூரியின் முதல்வர் தலைமையில் நடைப்பெற்றது.

அதன் தொடர்ச்சியாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்டிடத்திற்கு முன்பாக தமிழ்த்துறை தலைவர் பூ.சீனிவாசன் தலைமையிலும், போர்ப்படை திறன் துறையின் தலைவர் புருஷோத்தமன் தலைமையிலும், கணிதத்துறை சார்பில் சரோஜினி தலைமையிலும், காட்சித் தகவழியல் துறை தலைவர் ஜெயக்குமார் தலைமையிலும் அத்திருவிழா நடைபெற்றது.

தொடர்ந்து, எம்.எல்.ஏ அ.சௌதரராஜன் கட்டிடத்தில் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையிலும், உளவியல்துறைத்தலைவர் சாய்கீதா தலைமையிலும் நடைபெற்றது. புள்ளியில் துறையில் கோகிலா முன்னிலையிலும், தாவரவியல் துறையில் துறைத் தலைவர் பாலாஜி தலைமையிலும், கணினித் துறையில் அத்துறையின் தலைவர் முருகன் தலைமையிலும், முதுகலை சமூகப் பணி மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற அவ்விழாவில் மாணவர்கள் தமிழர்களின் கிராம கலையான தப்பாட்டம் உறியடி போன்ற தமிழக பரம்பரை கலையை விளையாடியது அங்கிருந்தவர்களை மெய் சிலிர்க்கச் செய்தது. மேலும், வணிகவியல் துறைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையிலும், நியூடிசன் துறையில் அன்னரஞ்சனி செல்லப்பா தலைமையிலும் நடைபெற்றது.

மொத்தத்தில் அக்கல்லூரி முழுவதும் விழாக்கோலம் கண்டது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சிறப்பாக வழிநடத்தினார் என்பது அவ்விழாவிற்கான வெகுச்சிறப்பாகும். மேலும் அவ்விழாவினை வெகுச் சிறப்பாக பொருளாதரத் துறைத் தலைவர் விஜயகாந்த் ஒருங்கிணைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here