75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஆழ்கடலில் கொடியேற்றி நூதன முறையில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் அச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆக . 15 –
சென்னை நீலாங்கரை கடலில் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியை ஏற்றி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் நூதன முறையில் தனி ஒரு ஆளாக கொண்டாடினார்.
இதே போல் புதுச்சேரியிலும் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினார். வண்ண வண்ண மீன்கள் நீந்தி செல்லும் தருணத்தில் மீண்களுடன் தேசிய கொடியை ஏற்றி 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஆழ்கடலில் அவர் கொண்டாடினார். இவர் காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவராவார். அவர் ஆற்றிய அச் செயல் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது..