ஆவடி, ஆக 2 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிப் புரிந்து வரும் அப்துல் ஜாபர் என்பவர் . அவர் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் கொரோனாக் குறித்த விழிப்புணர்வு பாடல்களை எழுதி அதனை பொதுமக்களிடம் பாடிப் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளார் . இவரின் சமூக அக்கறையை கண்டு பொதுமக்களும் பாராட்டி வந்த நிலையில் அவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளச் செய்திக்கேட்டு அப்பகுதி ஆசிரியர்கள் பாராட்டு விழா எடுத்துள்ளனர். அது குறித்த தகவல்களில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் கூடுதல் பொறுப்பாளர் அப்துல் ஜாபர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 60க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று இருக்கின்றார். அதனை கௌரவிக்கும் வகையில் இன்று ஆவடி வீட்டுவசதி வாரியம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆவடி மாநகராட்சி சுகாதார கூடுதல் பொறுப்பாளர் அப்துல் ஜாபரை அழைத்து கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து புத்தகம் கொடுத்தார்கள் இந்த கௌரவிப்பு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ராஜி உதவி தலைமையாசிரியர் அனிதா மற்றும் ஆசிரியர்கள் .மாலதி. குப்புராஜ் .விஜயசாந்தி. உடன் இருந்தனர்