விருதுநகர் அருகே காடனெரி, துலுக்கப்பட்டி கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு விதமான பாடப் புத்தகங்கள் மற்றும் கதை, அறிவியல் சம்பந்நப்பட்ட புத்தகங்களை திரட்டி வந்து கிளை நூலகம் அமைத்தும் கிராமத்தினை பசுமை கிராமமாக மாற்ற மரங்களை நட்டும் அடுத்து வரும் தலைமுறை பிள்ளைகள் நல் வழியில் தங்கள் இளமைப் பருவங்களை படிப்புடன் கூடிய வளர்ச்சியை காணவும்
தங்களின் இம்முயற்சி ஒரு துவக்கமே இவை அடுத்தடுத்த தலைமுறைகள் இப்பாதையில் பயணிக்க வழிவகுக்கும்
எனவும் தொடர்ந்து எங்களின் கிராம நலப்பணிகள் ஆண்டு முழுவதும் நடந்துக் கொண்டேயிருக்கும் எனவும் உறுதிப் பூண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் RK எலைட் அறக்கட்டளை நிர்வாகிகள் செந்தில் அப்பையன், தசர பாண்டியன் , காவலர் சுரேஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் , இளைஞர்கள் என ஏராளமனோர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனார். இப்பணியை தொடர்ந்து செயல் படுத்தி வருபவர்களுக்கு நினைவுப் பரிசுகளை அறக்கட்டளை சார்பில் வழங்கி அவர்களை கௌரவப் படுத்தினர்.