ராமநாதபுரம், ஜூன்
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான என்.ஐ. ஏ. நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. குடிநீர் பிரச்னை மூன்றாம் உலகப் போரின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காலிக்குடங்களுடன் பெண்கள் குடிநீருக்காக அலைந்து திரியும் பரிதாபம் நீடிக்கிறது. காவிரி நீர் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் குடிநீர் பற்றாக்குறை அவலம் தொடர்கிறது . காவிரி குடிநீர் விநியோகத்தை மீண்டும் முறையாக செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . குடிநீர் மராமத்து பணிக்காக அரசு ஒதுக்கிய ரூ.500 கோடி நிதியை முறையாக பயன்படுத்தி ஏரி, குளங்களை தூர் வார வேண்டும். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என கணிக்க தவறிய அதிகாரிகளை எஸ்டிபிஐ., கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தனியாரின் தண்ணீர் கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையின மக்களை மிரட்டி பாஜக கொள்கை களை செயல் படுத்த என்ஐஏ.,வின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். என்ஐஏ., என்பது நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி, நரேந்திர மோடி இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி போல் செயல்பட்டு எஸ்டிபிஐ ., கட்சியின் துண்டு பிரசுரங்களை கைப்பற்றியதாக கூறும் விஷம பிரசாரம் மூலம் எஸ்டிபிஐ., கட்சியை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. எஸ்டிபிஐ., கட்சி 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் 5 தேர்தல்களை சந்தித்துள்ளது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கு எஸ்டிபிஐ., கட்சி துவங்கிய காலம் முதல் தற்போது வரை போராடி வருகிறது. எனவே சிறுபான்மையின மக்களுக்கு எதிரான என்ஜஏ., நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா எதிர்த்த, என்ஐஏ., நடவடிக்கையை மத்திய அரசு விலக்கி கொள்ள வேண்டும். குழாய் வழியாக எரிவாயு எடுத்து செல்லும் திட்டம், கூடங்குளம் அணு மின் உலை, நியூட்ரினோ உள்ளிட்ட நாசகார திட்டங்களை தமிழகத்தில் தொடர்வதை நிறுத்தக் கோரி மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள், மதச்சார்பற்ற அமைப்புகள் வரும் 25 ல் அறிவித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக
எஸ்டிபிஐ., கட்சி பங்கேற்கிறது. தமிழக உள்ளாட்சி தேர்தல் சந்தேகமே. ஒரு வேளை உள்ளாட்சி தேர்தல்  நடந்தால் அமமுக உடன் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். எஸ்டிபிஐ., கட்சி பொதுச் செயலர் அப்துல் ஹமீது, மாநிலச் செயலர் ரத்தினம் அண்ணாச்சி, மாநில மகளிரணி துணை தலைவர் உம்முல் தவ்லத்தியா, மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், மாவட்ட பொதுச் செயலர் செய்யது இபுராஹீம், மேற்கு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், பொதுச் செயலர் முகமது இஸ்ஹாக், எஸ்டிபிஐ., தொழிற்சங்க நிர்வாகி முஸ்தாக், செய்தி தொடர்பாளர் செய்யது இபுராஹீம் அமமுக., மாவட்ட செயலர் வ து ந ஆனந்த், திமுக., ஒன்றிய செயலர்கள் புல்லாணி, முத்துச் செல்வம், மாவட்ட பிரதிநிதி ஆனந்த், களிமண் குண்டு மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகி பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here