பொன்னேரி, ஏப். 20 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட, மீஞ்சூர் ஒன்றியம். சோழவரம் ஒன்றியம் .உள்ளிட்ட கிராமப் புறங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.
அதுக்குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அறிந்தவர் கிராமப்புறங்களில் உள்ள (ஐ.சி.டி.எஸ்) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட பணியாளர்களுக்கு இப்புகார் குறித்து தகவலளித்து, உடன் ஆய்வு நடத்தி குழந்தைகளை பேணிக் காக்க வேண்டும் என்பதற்காக குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க ஏற்பாடு செய்தார்.
அதற்கான விழா கோடூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமை ஏற்று, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மீஞ்சூர் ஒன்றியத்தில் 211 .சோழவரம் ஒன்றியத்தில் 58. குழந்தைகளும் மொத்தம் 269 குழந்தைகளை கண்டறிந்து. அவர்களுக்கு 18 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி மகேந்திரன். காங்கிரஸ் நிர்வாகி வில்சன். வினோத். உள்ளிட்ட திரளான பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






















