விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த உத்திரவிட்டு ஆணை பிறப்பித்துள்ளார்.
வத்திராயிருப்பு; நவ. 20-
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் 20.11.2019 முதல் 29.2.2020 வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளார். இதனால் கண்மாய்களின் மூலம் 1676.48 ஹெக்டேர் நிலங்களும், நேரடி பாசன கால்வாய் மூலம் 249.47 ஹெக்டேர் நிலங்களும் ஆக மொத்தம் 1925.95 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அவர் ஆணையிட்ட உத்திரவில் குறிப்பிட்டுள்ளார்.