சென்னை, பிப். 28 –

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.

   அரசுப் பணியில் இருக்கும் போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உதவுவதற்காக அரசால், அரசாணை (நிலை) எண்.18 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்(க்யூ1)துறை, நாள்.23.01.2020-இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

  சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஈப்பு ஓட்டுநராக பணிபுரிந்து 19.06.2014 அன்று பணியிடையே காலமான சகாயராஜ் என்பவர் மகன் ச.அரவிந்த்ராஜ் என்பவருக்கு கருணை அடிப்படையில் ஈப்பு ஒட்டுநராக இன்று (28.02.2022) ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பணி நியமன ஆணைகள் வழங்கினார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நல ஆணையர் சோ.மதுமதி, மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here