கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவ, மற்றும் மாணவியர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டத்தை நான்காவது நாளாக தொடர்கின்றார்கள். வழுவிழந்து வரும் வகுப்பறை கட்டடங்களை புதிதாக கட்டித்தர தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முனவைத்து போராட்டத்தில் தொடர்கின்றனர்.
கும்பகோணம், பிப். 28 –
கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில், பிரதான கட்டிடம் வலுவிழந்து தொடர்ந்து நாள்தோறும் காரைகள் பெயர்ந்து விழும் அவலம் ஏற்பட்டு வருகிறது. பெரும் விபத்து ஏற்படும் முன், கட்டிடங்களை முழுமையாக தமிழக கலை பண்பாட்டுத்துறை சீரமைத்திட தரக்கோரி, கல்லூரி மாணவ மாணவியர்கள் தொடர்ந்து 4வது நாளாக இன்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஹெல்மெட் அணிந்து நூதன முறையில் உள்ளிருப்பு முற்றுகை போராட்டத்தை தொடர்வதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் கல்லூரி முதல்வர் அருளரசன் முன்னிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு எட்டப்படவில்லை, கலை பண்பாட்டுத்துறையினரும், தஞ்சை மாவட்ட ஆட்சியரும் நேரில் வந்து கட்டிட சீரமைப்பு பணிக்கு உறுதியளிக்க வேண்டும் என மாணவர்கள் பிடிவாதத்தால் போராட்டம் தொடர்கிறது.
தமிழகத்தில் உள்ள இரு அரசு கவின் கலைக்கல்லூரிகளில் ஒன்று சென்னையிலும் மற்றொன்று கும்பகோணத்தில் இயங்கி வருகிறது, நான்கு ஆண்டுகள் வரைகலை, சிற்பகலை மற்றும் காட்சி தொடர்பியல் மற்றும் வடிவமைப்பு என 3 பிரிவுகளில் 4 ஆண்டுகள் இளநிலை படிப்பும், இரு ஆண்டுகள் முதுநிலை படிப்பும் உள்ளது சுமார் 300 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வரும் இக்கல்லூரியில், 1978ல் கட்டப்பட்ட, சுமார் 44 ஆண்டுகள் பழமையான பிரதான கட்டிடம் வருடாந்திர பராமரிப்பு இன்றி அலட்சியமாக விட்டதால், கட்டிடங்களில் பல இடங்களில் மரங்கள் வளர்ந்து வேரூன்றி, கட்டிடம் வலுவிழந்து காணப்படுகிறது, இதனால் மாணவ மாணவ கல்வி பயிலும் வகுப்பறைகள் உள்ளிட்ட பல இடங்களில் அவ்வப்போது சுவற்றின் மேற்கூறை மற்றும் பக்கவாட்டு சுவர்களின் காரைகள் பெயர்ந்து விழுந்து நாள்தோறும் அச்சத்துடன் கல்லூரிக்கு வரவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது பல இடங்களில், கட்டிடத்தின் கான்கிரீட் உள்ளே உள்ள கம்பிகள் தெரிகிறது, இது குறித்து மாணவர்கள் கல்லூரி முதல்வர் அருளரசனிடம் இரு மாதங்களுக்கு முன்பே ஆபத்து நேராமல் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த 24ம் தேதி, கல்லூரி முதல்வர் அறைக்கு அருகேயுள்ள, நடைபாதையில் மாணவ மாணவியர்கள் குடிநீர் குடிக்கும் இடத்திற்கு மேலே பெரிய அளவில் காரைகள் பெயர்ந்து விழுந்தது, காரை பெயர்ந்து விழுந்த நேரத்தில், அதிர்ஷ்டவசமாக அங்கு மாணவ மாணவியர்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 25ம் தேதி முதல், நாள்தோறும் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வாயில் முன்பு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, உள்ளிருப்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், 44 ஆண்டுகள் பழமையான இக்கல்லூரியின் பிரதான கட்டிடம், உரிய பராமரிப்பு இன்றி ஆண்டு கணக்காக யாரும் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு, மரங்கள் முளைத்தும், வேரூன்றியும், கட்டிடம் அங்காங்கே சிதலமடைந்தும், அடிக்கடி காரைகள் பெயர்ந்து விழுந்தும் வருகிறது, ஒவ்வொரு மாணவரும் கல்லூரிக்கு வரும் நாட்களில் தங்கள் மேல் எப்போதும் எந்த சுவற்றின் காரை பெயர்ந்து விழுமோ என்ற அச்சத்துடன் கூடிய உயிர் பயத்திலேயே, கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்,
எனவே அரசு கலை பண்பாட்டுத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த கல்லூரிக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் உடனடியாக கட்டித்தர முன்வர வேண்டும் என்றும் நெல்லை பளையங்கோட்டை பள்ளி சுவர் இடிந்த 3 பேர் பலியான சம்பவம் போல இங்கும் அத்தகைய அவலம் ஏற்படும் முன்பு, மாணவ மாணவியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் நலன் கருதி, கழிப்பறை குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாவதால், அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் உடனடியாக கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி இன்றும் 4வது நாளாக வகுப்புளை புறக்கணித்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பி முற்றுகையிட்டு, நூதன முறையில் ஹெல்மெட் அணிந்து, உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் டிஎஸ்பி அசோகன் பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு காண முடியவில்லை, மாணவர்கள், கலை பண்பாட்டுத்துறையும், தஞ்சை மாவட்ட ஆட்சியரும் கட்டிட அவலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைப்பு மற்றும் புதிய கட்டிடத்திற்கு உறுதி தரும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என பிடிவாதம் கொண்டு போராடி வருகின்றார்கள்.
பேட்டி : கல்லூரி மாணவ மாணவியர் 1. சிவரஞ்சனி 2. மதன்குமார்





















