மீஞ்சூர், மே. 18 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக மனோகரன் 39 என்பவர் இருந்து வந்தார் இவர் நேற்றைய முன்தினம் 15 ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை போலீசார் செங்குன்றம் உதவி கண்காணிப்பாளர் முருகேசன் அவர்கள் தலைமையில் ஆவடி சத்தியமூர்த்தி . மணலி தஷ்ணாமூர்த்தி .எண்ணூர் பரமானந்தம் ஆகியோர் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுந்தரபாண்டியன், நாகராஜ், ராஜ்குமார் ,யுவராஜ் ,ராஜேஸ், பாலா ,மது ,கோபாலகிருஷ்ணன், சூர்யா, உள்ளிட்ட ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




















