கும்பகோணம், மார்ச். 19 –
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தில் நேற்றிரவு நடைபெற்ற தெப்போற்சவத்தில் மந்திரபீடேஸ்வரியான ஸ்ரீ மங்களாம்பிகை நடுநாயகமாக வீட்டிருக்க, அவரின் இருபுறமும், கலைமகளும், அலைமகளும் விண்சாமரம் வீசியபடி இருக்க, முப்பெரும் தேவியரும் ஒருசேர பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க, தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தில் உலா வந்த மும்பெரும் தேவியர்களை நான்கு கரைகளிலும் திரண்டிருந்த ஏராளமானோர் பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்




















