நாசிக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 21ம் தேதி சோதனை நடத்தினர்.  இதில் நில ஒப்பந்தங்கள் உட்பட பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  சொத்துக்கள் வாங்க மிகப் பெரிய அளவில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.25.45 கோடி பல இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கணக்கில் காட்டப்படாத வருவாயில் சொத்துக்களை வாங்கியவர்கள் எல்லாம் மகாராஷ்ட்ராவில் வெங்காயம் மற்றும் இதரப் பயிர்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆவர். இதுவரை ரூ.100 கோடிக்கும் மேலான கணக்கில் காட்டப்படாத வருவாய்  கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து மேலும் விசாரணை நடைபெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here