திருவாரூர், டிச. 21 –

தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொது மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை, கடந்தசிலதினங்களுக்கு முன்பு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்து அம்மனுக்கள் மீதான தீர்வினை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும் என அப்போது முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் மக்களின் தேவைகளை நுணுக்கமாக கவனித்து, அதற்குரிய தீர்வுகளை வழங்குவதில் ஈடற்ற அரசாகத் திகழும் எனவும், அரசின் வெற்றிப்பாதையில் இத்திட்டம் மேலும் ஒரு மைல் கல்லாக உருவாகும்என அப்போது அவர் தரிவித்தார்.

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் கடந்த 3 நாட்களாக நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் 12 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு 800  மனுக்களை அளித்துள்ளதாக நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா தெரிவித்தார். மனுக்களை பெற்றுக் கொண்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அவற்றை இணைய தளத்தில்  உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here