செங்கல்பட்டு, டிச. 15 –

தாருக்கும், தண்ணீருக்கும் சரிபட்டு வராது என்பதால் சாலைகள் சீரமைப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக மழை நீர் வடிந்த பின் முழு வீச்சில் சாலை சீரமைக்கும் பணி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறினார்.

அதைப் போன்று முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களின் மற்றொருக் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் புகாரின் அடிப்படையில் தான் சோதனைகள் நடைபெறும் இதில் அரசு தலையீடு ஏதுமில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இரயில்வே மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் நாள்தோறும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சமாளிக்க சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட மேம்பால பணிகளை மீண்டும் துவங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். சுமார் 163 கோடி மதிப்பீட்டிலான திட்ட மேம்பால பணிகளை துவங்கி வைத்தனர்.

 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி – சிங்கபெருமாள்கோவில் இரயில் நிலையங்களுக்கிடையே 138.27 கோடி மதிப்பிலும், வண்டலூர் – வாலாஜாபாத் இடையே 25.522 கோடி மதிப்பில் பல்லடுக்கு மேம்பாலம் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அடிக்கல் நாட்டி  துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மழைக்காலம் இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தினால் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை தற்காலிகமாக மூன்று பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், தாருக்கும்,  தண்ணீருக்கும் ஒத்துப் போகாது என்பதால் தற்காலிகமாக பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், பாலாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒரு வாரத்தில் சரிசெய்யும் படும் என தெரிவித்தார். மேலும், அதிமுக அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடப்பது புதிதல்ல எனவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் புகாரின் அடிப்படையில் தான் சோதனைகள் நடைபெறும். இதில் அரசு நேரடியாக தலையிடுவதில்லை அமைச்சர் தன்னை நிராபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும், அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெறுவதால் அவர் குற்றம் படிந்தவர் என அர்த்தமில்லை அவர் நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபித்தால் விட்டு விடப்போகிறார்கள் என செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here