மறைமலைநகர், சனவரி. 26 –

இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில் நம் நாட்டின் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவினை வெகுச் சிறப்பாக அப்பகுதி மக்கள் கொண்டாடினார்கள்.

இவ்விழாவில் சமூக ஆர்வலர் வேலு என்கின்ற வேலாயுதம் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.மேலும் நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிறுவர் சிறுமிகள் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here